Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம்:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் யோசனை

வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம்:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் யோசனை

வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம்:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் யோசனை

வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம்:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் யோசனை

ADDED : மார் 30, 2010 03:51 AM


Google News

சென்னை:"பற்றாக்குறையை போக்க, அறிவிக்கப்பட்டுள்ள மின் திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த வேண்டும்.

வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டும்' என, அரசுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் மின் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில், பல மணி நேர மின் தடை உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது, அறிவிக்கப்பட்ட மின் தடையை 2 மணி நேரத்தில் இருந்து 3 மணிநேரமாக அதிகரிக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. இது உண்மை என்றால், கிராமப்புறங்களில் 8 மணி நேரத்திற்கு மின்சாரம் இருக்காது.தமிழகம் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டு விட்டதாக தம்பட்டம் அடிக்கப்படுகிறது. ஆனால், தேவை க்கேற்ப மின் உற்பத்தி இல்லை. மின் உற்பத்தியை பெருக்க, எந்த நடவடிக்கையும் இல்லை.

இதற்கென தனியாருக்கு பல்லாயிரக்கணக்கான நிலங் கள், தாரை வார்க்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் மொத்த உற்பத்திக்கும், மின் தேவைக்கும் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. திறப்பு விழாக்களுக்கும், பாராட்டு விழாக்களுக்கும் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது மின் உற்பத்தியை பெருக்குவதில் காட்டியிருக்கலாம். சட்டசபை புதிய கட்டடத்தை தினமும் சென்று பார்த்த முதல்வர், மின் உற்பத்தித் திட்டங் களை மாதம் ஒரு முறையாவது சென்று பார்த்திருந்தால், ஒன்றிரண்டு திட்டங்களாவது நிறைவேறியிருக்கும்.அனைத்து திட்டங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும். மின் பற்றாக்குறையை போக்க மற்ற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us